அன்பு அப்பா ! - கீரை.தமிழ் இராஜா



எனது முதல் கதாநாயகரே !


தான் கானாத உலகத்தை

தன் பிள்ளை காண வேண்டும் என்று

எறும்பு போல் உழைத்து

தேனீ போல் சேமித்த

என் அப்பா !


கண்டிப்பு கண்களில் இருந்தாலும்

பாசத்தை அருவி போல கொட்டி தீர்க்கும் நல்ல உள்ளம் படைத்த என் அப்பா !


தூக்க முடியாது பாரத்தை சுமந்து

சரியான இடத்தில் வைத்து

என்னை

நேர் கோட்டில்

பயனிக்க வைத்தது

என் அப்பா !


கண்ணாடியில்

என் முகம்

கானும் போது

அதில் தெரிவது நான் அல்ல,

நீயே அப்பா !


தன் உடல், பொருள், ஆவி, அனைத்தும் எனக்காக தியாகம் செய்து

என்னை உருவாக்கிய

என் அப்பா !

நான் ஒவ்வொரு முறை வாழ்வில் வெற்றி காணும் போதெல்லாம் உங்களிடம் வந்து கண்ணீரை மட்டுமே காணிக்கையாக செலுத்த முடிகிறது..

இன்று நான் வளர்ச்சிபாதையில் செல்லும் பொழுது நீர் என் உடன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை தினம் தினம் ஏங்க வைக்கிறது...

நீங்கள் இம்மண்ணில் இல்லை என்றாலும் எங்கள் மனதில் (எங்கள் உடன்) என்றும் நிலைத்து நிற்ப்பீர்கள் !


உங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்கி ஆசிர்வாதம் பெறுகிறேன் !


# நீங்கள் என் அப்பாவாக கிடைத்தது என் பாக்கியம் அப்பா !

Comments