துண்டுச் சீட்டு - “அநீதி வீழும், அறம் வெல்லும்”. !
துண்டுச் சீட்டு - “அநீதி வீழும், அறம் வெல்லும்”. !
முன்னாள் முதல்வர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்து, அவமதித்து, இழுத்து வந்த காட்சியை நாம் எளிதில் மறக்க முடியாது. ஒரு 77 வயது முதியவர் என்ற அடிப்படை இரக்கம் கூட இல்லாத வரலாற்று கொடும் அரசியல் பழிவாங்கல் சம்பவத்தில் அதுவும் ஒன்று. கலைஞரை கைது செய்து, அலைக்கழித்து, சிறையில் அடைக்க முற்படுகின்றனர். 77 வயது கலைஞர், சிறையின் வாசலிலேயே உட்கார்ந்து தர்ணா செய்கிறார்.
அப்போது, அவரிடம் கருத்துக்கேட்க ஒரு துண்டுச்சீட்டு நீட்டப்படுகிறது. கலைஞர் எழுதித்தருகிறார் “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்று.
கலைஞரை அன்று அவமதித்த, ஜெயலலிதா அப்பல்லோவில் 75 நாட்கள் இருந்து இறக்கிறார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறுகிறார். அந்த இறப்பிற்கான நீதியை “மு.க. ஸ்டாலின் எனும் நான்” பெற்றுத்தருவேன் என திமுக தலைவர் சொல்லியிருக்கிறார். வரலாற்றை அந்த சின்ன துண்டுச்சீட்டில் அன்று கலைஞர் எழுதிக்காட்டினார். நாளை மு.க. ஸ்டாலின் செயல்படுத்திக் காட்டுவார். “அநீதி வீழும், அறம் வெல்லும்”.
Comments
Post a Comment